"எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு...அண்ணாமலை ஐயா நீங்கதான் கேக்கணும்" சுய ரூபத்தை காட்டி மிரளவிட்ட நபர்
எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு...
அண்ணாமலை ஐயா நீங்கதான் கேக்கணும்"
திடீரென சுய ரூபத்தை காட்டி மிரளவிட்ட நபர்
சென்னை பாரிமுனை அருகே, காரை சென்டர் மீடியனில் மோத விட்ட கார் ஓட்டுநர், மது போதையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பார்க்கலாம் விரிவாக...
சென்னை பாரிமுனை முத்துசாமி பாலம் அருகே, மாலை 3 மணியளவில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்ததில், சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்படுத்தியது...
அதிக சத்தத்துடன் விபத்து ஏற்பட்டதால், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போக்குவரத்து போலீசார், கார் ஓட்டுநரை பத்திரமாக மீட்டனர்.
நல்வாய்ப்பாக ஓட்டுநர் உயிர் பிழைத்தார் என எண்ணிக்கொண்டிருக்க, அப்போது தான் தனது சுய ரூபத்தை காட்டினார் அந்த வாகன ஓட்டி..
விபத்து ஏற்படுத்தியவரை விசாரித்த போது, அவரது பெயர் தரணி என்றும் அவர் அதிகளவில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதோடு, தகுந்த ஆவணங்களை தராமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அத்துடன், தான் பாஜகவை சேர்ந்தவர் என்பதாலேயே தன்னை அவமானப்படுத்துவதாக புலம்பித்தள்ளினார்..
தான் எந்த தவறும் செய்யவில்லை என குமுறிய அந்த போதை ஆசாமி, இங்கேயே தூ*கு மாட்டிக் கொள்வேன் என கூறி போலீசாரை கடுப்பேற்றினார்...
மது போதையில், தனது காரை சேதப்படுத்தி விட்டு அபராதமும் விதிக்காமல் ஆட்டம் காட்டியதோடு, நான் ஜெயிலுக்கு போனுமா என அலப்பறையை கிளப்பினார்..
ஒரு வழியாக காரை அப்புறப்படுத்தி, போதை ஆசாமியை அனுப்பி வைத்த நிலையில், குடி போதையில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்கான அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.