"1 ரூபாய் வரவில்லை என்றால் அரசியல் விட்டே போய் விடுகிறேன்" - தமிழிசை முன் அண்ணாமலை ஆவேசம்

Update: 2024-07-31 05:36 GMT

ஃபார்முலா கார் பந்தயத்திற்காக தொழில் நிறுவனங்களிடம் மிரட்டி பணம் வசூலிக்கப்படுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில், பிரதமர் மோடி பதவியேற்றப் பின்னர் கொண்டு வந்த திட்டங்கள் அதன் பயன்கள் குறித்த 'கனெக்டிங் 1.4 பில்லியன்' என்ற புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்த‌ர‌ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, கார் பந்தயத்தை நடத்தும் நிறுவனம், தமிழகத்தில் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்றால், அரசியலை விட்டே சென்றுவிடுவதாக சாவல் விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்