என் மண், என் மக்கள் பாதயாத்திரையின் ஒரு பகுதியாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, குமரி மாவட்டம் களியக்காவிளை முதல் குழித்துறை வரை 7 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது, ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்ததோடு, அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து இரவி புதூர் கடை சந்திப்பில், நீட் தேர்வில் வென்று அரசு கல்லூரியில் சேர்ந்த மாணவி அக்ஷய மஹாலட்சுமி என்பவரை, வாகனத்தில் ஏற்றி வாழ்த்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு மூலம் அனைத்து மாணவர்களும் மருத்துவம் பயில்வதற்கான சம வாய்ப்பை, பிரதமர் மோடி ஏற்படுத்தி கொடுத்திருப்பதாக கூறினார்...