ஓமலூரை அடுத்த தாரமங்கலம் ஒன்றியத்தில் உள்ள சிவந்தனூர் பகுதியில் உள்ள ஏரியில், நள்ளிரவு நேரங்களில் லாரி மற்றும் டிராக்டர்கள் மூலம் மணல் கடத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் எந்தவித நடடிவக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தாரமங்கலம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளரான மசியப்பன் காங்கேயன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ள அவரது மனைவி வீரம்மாள் ஆகியோரின் அனுமதியோடு, மணல் கடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படும் நிலையில், பொதுமக்களும், அப்பகுதி இளைஞர்களும் சேர்ந்து மணல் கடத்தலை தடுக்கச் சென்றனர். அப்போது. லாரிகளை சிறை பிடித்த அவர்கள், அதிமுக ஒன்றிய செயலாளர் மசியப்பன் காங்கேயன் மற்றும் லாரி ஓட்டுர்களையும் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.