நடிகை விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு - இன்று விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்

Update: 2023-09-12 06:12 GMT

நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காவல்துறை விசாரணைக்கு ஆஜராக உள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, 7 முறை கட்டாயப்படுத்தி கருகலைப்பு செய்த‌தாக, விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். அதன்பின்னர், விஜயலட்சுமிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 9ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு, சம்மன் அனுப்ப‌ப்பட்டது. ஆனால், வேறு வழக்கு ஒன்றில் ஆஜராக ஈரோடு சென்றதால், அன்று ஆஜராகவில்லை. இந்நிலையில், இன்று காவல்துறை விசாரணைக்கு சீமான் ஆஜராக உள்ளார். அப்போது, விஜயலட்சுமி அளித்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்