திடீரென கேட்ட சத்தம்.. ஒரே நேரத்தில் பறிபோன 2 உயிர்கள்

Update: 2023-10-22 05:48 GMT

சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த கோபிநாத் என்பவர், திண்டிவனத்தில் தனியார் வங்கியின் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் விழுப்புரத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்த போது, அதே கிளையில் பணியில் இருந்த மதுரா பாண்டிஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள கிளையில் மதுரா பாண்டிஸ் பணியாற்றி வந்த நிலையில், அவர்களது பழக்கம், கோபிநாத்தின் மனைவிக்கு தெரிய வந்துள்ளது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே புறவழிச்சாலையில் கோபிநாத்தின் கார் நின்றுள்ளது. அதில், மதுரா பாண்டிஸ் குத்தி கொல்லப்பட்டும், எதிர் திசை சாலையில் அடையாளம் தெரியாத வாகனத்தில் கோபிநாத் அடிபட்டும் இறந்து கிடந்துள்ளனர். தகவலறிந்து சென்று இருவரின் உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர், மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்