விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2023-08-16 05:55 GMT

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் தென்மாவட்டங்களை சொந்த ஊர்களாக கொண்டவர்கள்,

தொடர் விடுமுறையை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வந்திருந்தனர். விடுமுறை முடிந்து, ரயில், பேருந்து மூலம் மீண்டும் பணியிடங்களுக்குச் செல்ல முற்பட்டனர். ரயில்களில் முன்பதிவு முடிவடைந்ததால், தனியார் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட்டுகள் விற்பனை அதிகரித்தது. வழக்கமாக ஏ.சி. பஸ் சீட்டர் ஆயிரத்து 600 ரூபாய் வரை விற்பனையாகும் நிலையில், நேற்று 3 ஆயிரத்து 500 வரை விற்பனையானது. ஏசி ஸ்லீப்பர் 2 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகும் நிலையில், 4 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஒருசில பேருந்துகளில் 5 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையானது. ஏ.சி அல்லாத சீட்டர் 2 ஆயிரம் ரூபாய் வரையும், ஏ.சி. அல்லாத ஸ்லீப்பர் 2 ஆயிரத்து 500 ரூபாய் வரையிலும் விற்பனையானதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்