எதேச்சையாக 3 இளைஞர்களிடம் சோதனை...விசாரணையில் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கும் இடமளிக்கும் வகையில் மூன்று இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், இளைஞர்கள் வந்த வாகனம் திருட்டு வாகனம் என்பதும், வாகனத்தை இயக்கி வந்த இளைஞர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும், மூவரும் போதை பொருள்கள் வாங்க பணமில்லாமல் தொடர்ந்து இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டது தெரியவர, வடகரை தாழனூர் கிராமத்தை சேர்ந்த சார்முகில், திருமலைப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் மற்றும் அருண் ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்த போலீசார், அவர்களிடம் இருந்து மூன்று இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.