மகளுடன் நெருக்கமான போட்டோவை தந்தைக்கே அனுப்பிய போட்டோகிராபர் - தந்தை செய்த தரமான சம்பவம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மகளுடன் இருந்த காதலை கை விட மறுத்த இளைஞரின் ஸ்டுடியோவை கல்லூரி மாணவியின் தந்தை அடித்து நொறுக்கினார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கே புதுப்பட்டி சேர்ந்த அழகர்சாமிக்கு, திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் 12 -ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்ததால், அந்த மாணவியின் தந்தை, கண்டித்துள்ளார். ஆனாலும் அழகர்சாமி கோயம்புத்தூர் சென்று மாணவியை தொடர்ந்து சந்தித்து வந்துள்ளார். மேலும் மாணவியுடன் தான் எடுத்த படத்தை அவரின் தந்தைக்கு செல்போனில் அனுப்பியதால் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை அழகர்சாமியின் ஸ்டூடியோவிற்கு சென்று அங்கிருந்த கம்ப்யூட்டர், கேமரா, பிரிண்டர் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி உள்ளார். தகவலறிந்த வடமதுரை போலீசார், மாணவியின் தந்தையை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.