"வா.. வாடா மோதி பாத்துடலாம்" காட்டு யானையை முறைத்த வளர்ப்பு யானை..உறைந்து போய் நின்ற பாகன்..
முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு மற்றும் அபயாரணயம் என்ற இரு யானைகள் முகாமில் 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு காலை மற்றும் மாலையில், யானைகளுக்கு உணவு வழங்கிவிட்டு பின்னர் அதை வனப்பகுதியில் விடுவது வழக்கம். அவ்வாறு, சந்தோஷ் என்ற காட்டு யானையை வனப்பகுதியில் விடும்போது, அருகில் ஒரு காட்டு யானை வந்தது. நீளமான தந்தத்துடன் இருந்த சந்தோஷ் யானையை கண்ட அந்த காட்டு யானை, நீண்ட நேரம் முறைத்தபடி நேருக்கு நேர் நின்றது. அதனை விரட்ட முடியாமல் அரை மணி நேரத்திற்கும்மேல், சந்தோஷ் யானையின் பாகன், செய்வதறியாமல் யானை அருகிலேயே நின்று கொண்டிருந்தார். நீண்ட நேரம் அதே இடத்தில் நின்ற அந்த காட்டு யானை, பின்னர் வனப்பகுதிக்கு சென்றது