5 வருடமாக தீராத வழக்கு.. ஒரு நொடியில் தீர்த்த வரிச்சியூர் செல்வம் - அதிர்ந்து போன போலீஸ் ஸ்டேஷன்
5 வருடமாக தீராத வழக்கு.. ஒரு நொடியில் தீர்த்த வரிச்சியூர் செல்வம் - அதிர்ந்து போன போலீஸ் ஸ்டேஷன்மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே வில்லூரை சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு காணாமல் போனதாக கூறி, அவரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், ஏற்கனவே கொலை வழக்கில் சிறையிலடைக்க பட்டிருக்கும் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்திடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் புவனேஸ்வரன் குறித்து கூறியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு வரிச்சியூர் செல்வத்திடம், புவனேஸ்வரன் கார் டிரைவராக பணிக்கு சேர்ந்திருக்கிறார். அப்போது, கேரளாவை சேர்ந்த ஒருவரை போலீசார் என்கவுண்ட்டர் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு வரிச்சியூர் செல்வம் தான் காரணம் எனக்கூறி அவரை புவனேஸ்வரன் மிரட்டியதாகவும், தொடர்ந்து பணம் பறிப்பில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஏற்பட்ட ஆத்திரத்தாலேயே புவனேஸ்வரனை, தூத்துக்குடி மாவட்டம் பாண்டியாபுரம் செக் போஸ்ட் அருகே கடத்தி சென்று கொன்றதாக வரிச்சியூர் செல்வம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இந்நிலையில், வரிச்சியூர் செல்வத்தை போலீஸ் காவலில் எடுத்துள்ள போலீசார், அவரை தூத்துக்குடி அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர்.