கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆக முயற்சி சோகத்தில் கர்ப்பிணி எடுத்த முடிவு.தோண்டி எடுக்கபட்ட 7 மாத சிசு

Update: 2023-07-26 12:07 GMT

திருப்பத்தூர் மாவட்டம் சுப்பராயன் வட்டம் பகுதியை சேர்ந்த மனோஜ்குமாரும் என்பவரும், கற்பகம் என்பவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதில் கற்பகம் கர்ப்பமான நிலையில், மனோஜ்குமாருக்கு வேறோரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனால் கற்பகம் தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவரது வயிற்றில் இருந்த 7 மாத சிசு உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கற்பகம் அளித்த புகாரின் பேரில், வாணியம்பாடி மகளிர் போலீசார் மனோஜ்குமாரை கைது செய்தனர். மேலும் மேட்டுபாளையத்தில் அடக்கம் செய்யப்பட்ட சிசுவை, வாணியம்பாடி வருவாய்த்துறையினரின் உதவியுடன் தோண்டி எடுத்து மகளிர் போலீசார், டிஎன்ஏ பரிசோதனைக்காக வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்