17 வயது சிறுமிக்கு பாத்ரூமில் பிரசவம்.. கண் திறந்து பார்க்காத குழந்தையை மண்ணுக்கு இரையாக்கிய கொடூரம்

Update: 2023-09-10 05:42 GMT

ஜெயங்கொண்டம் அடுத்த மீன்சுருட்டி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரும் அதே கிராமத்தை சேர்ந்த செஞ்சூரன் என்ற இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் முடிவெடுத்ததாக கூறப்படும் நிலையில், சிறுமி திடீரென கர்ப்பம் தரித்தரிக்கிறார். இதில், கடந்த ஐந்தாம் தேதி மெடிக்கலில் இருந்து வயிற்று வலி மாத்திரையை வாங்கி சிறுமி உட்கொண்டதாகவும், யாருக்கும் தெரியாமல் கழிவறையில் வைத்து குழந்தை பெற்றெடுத்தாகவும் கூறப்படுகிறது. பிறந்த குழந்தை சில நிமிடங்களிலே உயிரிழந்த நிலையில், அருகில் உள்ள காலி இடத்தில் குழந்தையை சிறுமி புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மறுநாள் தீராத வயிற்று வலியால் துடிதுடித்த சிறுமியை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், போக்வின் கீழ் வழக்குபதிவு செய்த நிலையில், சிறுமியின் காதலனான இளைஞர் செஞ்சூரனை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்