2வது நாளாக தொடரும் ED ரெய்டு... நடந்தது என்ன..?

Update: 2023-09-13 12:28 GMT

கரூரில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதால், மணல் அள்ளும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் வாங்கலை அடுத்த மல்லம்பாளையம் கிராமத்தில் செயல்படும் மணல் குவாரியில் சோதனை நடைபெறுகிறது. இதனால், மணல் அள்ளும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மணல் குவாரிகள் செயல்படாமல், 3 நாட்கள் விடுமுறை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. செம்மடை அருகில் உள்ள லாரிகள் நிறுத்தும் இடத்தில், நூற்றுக்கணக்கான வெளியூர் லாரிகள் காத்துக்கிடக்கின்றன. கரூர் மாவட்டத்தில் இருந்து நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, லாரிகள் மூலம் மணல் எடுத்துச் செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்