ரெடியான சங்கராபரணி ஆற்றுப் பாலம் -வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சங்கராபரணி ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து சீராகி உள்ளது.

Update: 2022-03-13 16:16 GMT
 விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சங்கராபரணி ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து சீராகி உள்ளது. செஞ்சி சங்கராபரணி ஆற்றை கடக்க உதவும் மேம்பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. இதனால், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு, பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். குறிப்பாக நேற்றைய தினம், நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள்அணிவகுத்து நின்றன. இந்நிலையில் பணிகள் முடிந்து வழக்கம்போல், போக்குவரத்து தொடங்கி உள்ளதால், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்