முதியவரை 10 கி.மீ சுமந்து சென்ற அவலம் - அடிப்படை வசதியின்றி தவிக்கும் மக்கள்
சாலை வசதி இல்லாததால் முதியவரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டிலில் சுமந்து சென்று மலை வாழ் மக்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சாலை வசதி இல்லாததால் முதியவரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டிலில் சுமந்து சென்று மலை வாழ் மக்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கல்வராயன் மலை வைலம்பாடி கிராம மக்கள் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி தவித்து வருகின்றனர். இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த ஆண்டி என்பவருக்கு உடல்நலம் சரியில்லாததால், அவரை 10 கிலோ மீட்டர் தூரம் கட்டிலிலேயே சுமந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சொந்த செலவில் சாலையை சீரமைத்து வரும் அக்கிராம மக்கள், சாலை வசதி மற்றும் பேருந்து வசதி செய்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.