அமெரிக்க லாட்டரி ஆசை.. WWE ராக் பெயரில் மோசடி - பணத்தை இழந்த மாற்றுத்திறனாளி

வெளிநாட்டு லாட்டரி மூலம் கிடைத்த 22 லட்சம் ரூபாயை கொண்டுவர, வரிக் கட்ட வேண்டும் எனக் கூறிய மர்மக் கும்பல், மாற்றுத் திறனாளியிடம் 71 ஆயிரம் ரூபாயை மோசடி செய்துள்ளது.

Update: 2022-02-02 10:11 GMT
வெளிநாட்டு லாட்டரி மூலம் கிடைத்த 22 லட்சம் ரூபாயை கொண்டுவர, வரிக் கட்ட வேண்டும் எனக் கூறிய மர்மக் கும்பல், மாற்றுத் திறனாளியிடம் 71 ஆயிரம் ரூபாயை மோசடி செய்துள்ளது.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த கன்னார் தெருவைச் சேர்ந்த சிங்கம் என்ற மாற்றுத் திறனாளி குடிசை வீட்டில் வசித்து வருகிறார். முகநூல் பயன்படுத்தும் அவருக்கு, இந்திய ரூபாயில் 22 லட்சம் ரூபாய் லாட்டரி விழுந்திருப்பதாக மெஸஞ்சரில் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் இருந்த எண்ணைத் தொடர்கொண்டபோது, அமெரிக்க டாலரை இந்தியா கொண்டு வர, வரி செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதை நம்பிய மாற்றுத் திறனாளி சிங்கம், பல்வேறு தவணையாக தனது முழு சேமிப்பு தொகை 71 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டதாக சான்று அனுப்பி அவரை நம்ப வைத்துள்ளனர். இந்நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், மோசடி குறித்து சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். வாழ்வதா, சாவதா என புரியவில்லை என மாற்றுத்திறனாளி சிங்கம் கூறியுள்ளது கலங்க வைத்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்