மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் - மழை நீர் கசியும் அவலம்

மதுரையில் 30 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் புதிய கட்டிடத்தில் மழை நீர் கசிந்ததால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2021-12-02 08:03 GMT
மதுரையில் 30 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் புதிய கட்டிடத்தில் மழை நீர் கசிந்ததால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அலுவலகத்தை முன்னாள் முதலவர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்த கட்டிடத்தின்  சுவர்களில் விரிசல் ஏற்பட்டதோடு, சுவரின் பூச்சுகளும் பெயர்ந்து விழுந்தன. இதனால் பணிகளில்  முறைகேடுகள் நடைபெற்றிருக்கலாம் என பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்நிலையில் மழை காரணமாக, கான்கிரீட் தூண்களில் நீர் கசிய தொடங்கியது. இதனால்  தமிழ்நாடு பொதுப்பணித்துறை கட்டிட பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்