தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-15 09:29 GMT
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.


ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு,  நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில்  நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மத்திய மேற்கு, அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில்  நிலவிய  காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை  ஒட்டிய கேரளா - லடச்சத்தீவு கடலோர பகுதியில் நிலைகொண்டுள்ளது.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்றும்,

தென் கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்றும் வீசக்கூடும் என்பதால், மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்