சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தின் கீழ் இருவர் கைது

அருப்புக்கோட்டையில் போக்சோ வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

Update: 2021-10-08 07:36 GMT
அருப்புக்கோட்டை அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெருமாள், லட்சுமணன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்த இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல்  கண்காணிப்பாளர் மனோகர், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்று, பெருமாள், லட்சுமணன் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யும்படி மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்