கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கைது - ஜாமினில் வெளிவர முடியாத சட்டத் திருத்தம்
கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமினில் வர முடியாத அளவிலான சட்ட திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துகளின் ஆக்கிரமிப்பு செய்யப்படுவது அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாவும், இதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்ட மசோதா தாக்கல் செய்தார். இதற்காக, 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையக் கொடைகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சமய நிறுவனத்தின் பொது விவகாரங்களில் ஆர்வம் கொண்டுள்ள எவரும் ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக புகார் செய்யலாம் என்றும் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கைது செய்தும், ஜாமீனில் விட முடியாத அளவிற்கு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டமுன்வடிவை அமைச்சர் சேகர்பாபு தாக்கல் செய்து ஆ்யவுக்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.