"மின்னகம் மூலம் 97% குறைகளுக்கு தீர்வு" - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

மின்வாரியத்தில் பொதுமக்களின் குறைகளை போக்க தொடங்கப்பட்ட மின்னகம் மூலம் 97 சதவீத பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-07 15:45 GMT
மின்வாரியத்தில் பொதுமக்களின் குறைகளை போக்க தொடங்கப்பட்ட மின்னகம் மூலம் 97 சதவீத பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில்பேசிய அவர்,கடந்த காலங்களில் மின்துறைகளில் உள்ள குறைகளை தீர்க்க 100க்கும் மேற்பட்ட எண்கள் இருந்ததாகவும், அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரே எண்ணில் புகார் தெரிவிக்கும் வகையில் மின்னகம் ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். அதேபோல் மின்துறை அதிகாரிக்கள்மீது வரக்கூடிய புகார்களை விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்