"முக்கிய முன்னோடிகளுக்கு சிலை அமைக்கப்படும்" - அமைச்சர் சாமிநாதன்

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், இலக்கியவாதிகள் நாவலர் நெடுஞ்செழியன், மு.வரதராசனார் உள்ளிட்ட முக்கிய முன்னோடிகளை போற்றும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உருவச் சிலைகள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-07 08:38 GMT
17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் 

"சென்னை காந்தி மண்டபத்தில் கட்டபொம்மன், மருது சகோதரர்களுக்கு உருவச் சிலைகள் அமைக்கப்படும்"

"அண்ணா பல்கலை. வளாகத்தில் குடியரசு முன்னாள் தலைவர் கலாம்-க்கு சிலை நிறுவப்படும்" 

"தேசிய கீதம் இயற்றிய ரவீந்திரநாத் தாகூர் சிலை சென்னை ராணிமேரி கல்லூரியில் அமைக்கப்படும்" 

"சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் நாவலர் நெடுஞ்செழியன் சிலை நிறுவப்படும்" 

"புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் உருவச் சிலை அமைக்கப்படும்" 

"20 நூற்றாண்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் மு.வரதராசனார் உருவச்சிலை ராணிப்பேட்டையில் நிறுவப்படும்"

Tags:    

மேலும் செய்திகள்