செப்.20-ல் பாஜக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - திமுக கூட்டணி கட்சிகள் கூட்டறிக்கை

வருகிற 20ஆம் தேதி மத்திய பாஜக அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Update: 2021-09-05 16:35 GMT
வருகிற 20ஆம் தேதி மத்திய பாஜக அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் காணொலி மூலம் கூட்டம் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்வது, தனியார் மயமாக்கல் உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து செப்டம்பர் 20 முதல் 30ஆம் தேதி வரை, பல்வேறு போராட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதன் படி, திமுக தலைமையிலான கூட்டணி கட்சி சார்பில், வருகிற 20 ஆம் தேதி காலை 10 மணிஅளவில், தங்களின் இல்லம் முன்பு கருப்பு கொடி ஏந்தி கண்டன போராட்டம் நடத்த திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை ஆகிய கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.  

Tags:    

மேலும் செய்திகள்