தமிழகத்தில் மேலும் 1,592 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-09-05 16:17 GMT
தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 22 ஆயிரத்து 678 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்து 18 ஆக அதிகரித்துள்ளது.   தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 607 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், 16 ஆயிரத்து 282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையை அடுத்து சென்னையில் 165 பேருக்கும், செங்கல்பட்டில் 127 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஈரோட்டில் 104 பேரும், திருவள்ளூரில் 84 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்