வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவுத் தொகுப்பு - அமைச்சர் கணேசன் தகவல்
கொரோனா காலத்தில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் சுமார் 1 லட்சம் பேருக்கு உணவுத் தொகுப்பு வழங்கப்பட்டதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் கூறினார்.
கொரோனா காலத்தில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் சுமார் 1 லட்சம் பேருக்கு உணவுத் தொகுப்பு வழங்கப்பட்டதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் கூறினார். சட்டப் பேரவையில் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர், கடந்தாண்டு கொரோனா காலத்தில் வெளி மாநிலத் தொழிலாளர்கள், 1 லட்சத்து 29 ஆயிரத்து 444 பேருக்கு, 15 கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை உள்ளிட்ட உணவுத் தொகுப்புகளை திமுக வழங்கியதாக கூறினார்.