தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சலுகைகள் - தடுப்பூசி செலுத்துவதை சலுகை அதிகரிக்குமா?

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை ஊக்கப்படுத்த, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. என்னென்ன மாதிரியான சலுகைகள்? இது அரசுக்கு பலனளிக்குமா?- பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பை..

Update: 2021-09-03 17:20 GMT
தமிழகத்தில் நாளொன்றுக்கு 5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசியானது செலுத்தப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனைத் துரிதப்படுத்தும் வகையில், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் குறிப்பிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, சென்னை மின்சார ரயிலில், இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தியவர்கள் நேரக் கட்டுப்பாடின்றி பயணிக்கலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 
மேலும், 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றைக் காண்பித்து, சீசன் மற்றும் ரிட்டர்ன் டிக்கெட்டுகளை வாங்கிக்கொள்ள அனுமதித்துள்ள ரயில்வே நிர்வாகம், தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறிப்பிட்ட நேரம் மட்டுமே பயணிக்க
கட்டுப்பாடு விதித்துள்ளது.இதேபோல், நீலகிரி மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே, டாஸ்மாக்கில் மது விற்பனை செய்யப்படும் என்ற உத்தரவை, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பிறப்பித்துள்ளார்.நீலகிரி மாவட்டத்தில் 97 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருவிழாக்காலம் நெருங்கி வரும் நிலையில், மக்கள் கூடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள், கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்தி இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அரசின் இத்தகைய நடவடிக்கைகள் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்துமா?

Tags:    

மேலும் செய்திகள்