மாநிலங்களவை தேர்தல் - போட்டியின்றி திமுகவின் அப்துல்லா தேர்வு

மாநிலங்களவை உறுப்பினராக திமுக வை சேர்ந்த முகம்மது அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-09-03 12:10 GMT
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டிருந்த முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் மரணமடைந்தார். இதனால் ஏற்பட்ட காலியிடத்தை  நிரப்புவதற்கான இடைத் தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த நிலையில் மாநிலங்களவைக்கு காலியாக உள்ள ஒரு இடத்திற்கு திமுக வேட்பாளராக முகமது அப்துல்லா நிறுத்தப்பட்டார். அதிமுக தரப்பில் வேட்பாளர் யாரும் நிறுத்தப்படவில்லை. இதனிடையே வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்று பிற்பகல்  3 மணியுடன் முடிவடைந்த நிலையில், அப்துல்லாவை தவிர்த்து வேறு யாரும் போட்டியிடாததன் காரணமாக போட்டியின்றி அவர் தேர்வு பெற்றார். இதனையடுத்து தலைமைசெயலகத்தில்,  தேர்தல் அதிகாரி சீனிவாசன் அறையில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள் முன்னிலையில், முகம்மது அப்துல்லா மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை பெற்றுகொண்டார்
Tags:    

மேலும் செய்திகள்