"ஓடிடி படங்கள் ரிலீஸ் செய்யப்பட மாட்டாது" - திரையரங்கு உரிமையாளர்கள் திட்டவட்டம்
நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசான படங்களை தியேட்டர்களில் வெளியிட முடியாது என திரையரங்கு உரிமையாளர்கள் மறுத்துள்ளனர். இந்த அறிவிப்பின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
கொரோனா ஊரடங்குக்கு பிறகு தமிழ் திரையுலகில் ஓடிடியின் தாக்கம் பன்மடங்கு அதிகரித்துவிட்டது.
திரையரங்குகள் மூடப்பட பல திரைப்படங்கள் ஓடிடி கதவை தட்டின..
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படங்கள்,
சூரரை போற்று, மூக்குத்தி அம்மன், ஜகமே தந்திரம், சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை உள்ளிட்டவை...
மேலும் பல படங்கள் ஓடிடியில் ரிலீசாக பேச்சுவார்த்தை நடைபெறும் சூழலில், திரையரங்கு உரிமையாளர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியான படங்களை தியேட்டர்களில் வெளியிட மாட்டோம் என உறுதியாக கூறிவிட்டனர் திரையரங்கு உரிமையாளர்கள்.
கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் இருப்பதால் தியேட்டர்களை திறக்க, அண்மையில் தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால் திரையரங்கு உரிமையாளர்களும், தயாரிப்பாளர்களும் நிம்மதி அடைந்துள்ள வேளையில், தியேட்டர் ரிலீஸுக்கு பல படங்கள் தயாராகியுள்ளன.
இந்த சூழலில் தியேட்டர்களில் வெளியாகும் படங்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சில நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
அதன்படி, தியேட்டருக்கு வரும் படங்கள் குறைந்தபட்சம் 4 வாரங்கள் ஒட வேண்டும் எனவும்,
அதன்பிறகே டிவிக்கோ அல்லது ஓடிடிக்கோ அந்த படத்தை கொடுக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர்..