சார்பதிவாளர் மீதான ஊழல் குற்றச்சாட்டு - புலன் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சார்பதிவாளர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்த புலன் விசாரணையை நேர்மையாக நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Update: 2021-09-02 15:18 GMT
சென்னை வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தியதில், கணக்கில் வராத 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு பணியாற்றிய சார்பதிவாளர் கோபால கிருஷ்ணன், தூத்துக்குடிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். 
ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அவர், மீண்டும் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், அது சம்பந்தமான உத்தரவை ரத்து செய்ய கோரி, கருப்பு எழுத்து இயக்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு புலன் விசாரணை நிலை குறித்தும், ஒழுங்கு நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்