"சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு கூட்டணி கட்சிகளை சேர்ந்த 8 பேர் வெற்றி பெற்றனர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு கூட்டணி கட்சிகளை சேர்ந்த 8 பேர் வெற்றி பெற்றனர். இந்நிலையில் இந்த எட்டு பேரையும் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களாக கருதக் கூடாது என்றும்,இவர்கள் சட்டப்பேரவையில் பேச தனியாக நேரம் ஒதுக்கக்கூடாது என்றும் உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, சட்டப்பேரவையில் உறுப்பினர்களை எங்கு அமரவைக்க வேண்டும், எவ்வாறு பேச அனுமதிக்க வேண்டும் என்பது, சபாநாயகரின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால்,சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிடும் வகையில் லட்சுமண ரேகை தாண்டக் கூடாது என கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.