"மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு" - பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் உறுதி
அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய மணப்பாறை உறுப்பினர் அப்துல் சமது, மாற்றுத்திறனாளிகளுக்கான அரசுப்பணியிடங்களை பூர்த்தி செய்ய முழு நேர ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், அரசுப்பணியிடங்கள், குழுமங்கள், வாரியங்கள், அரசு கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்களில் சி & டி பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இட ஒதுக்கீடு உகந்ததாக கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் ஏ & பி பணியிடங்களில் 559 பணியிடங்கள் மற்றும் அரசு தேர்வாணைய மூலமாக 1095 பணியிடங்களும் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.