இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் லிப்ட் கட்டாயம் - நகராட்சி நிர்வாகம் கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

இரண்டு அடுக்குகளுக்கு மேல் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் மின்தூக்கி உள்ளிட்ட வசதிகள் கட்டப்பட வேண்டியது கட்டாயம் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆணை பிறப்பித்துள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-01 07:27 GMT

கட்டடங்கள், போக்குவரத்து மற்றும் இணையதளங்கள் ஆகியவற்றை மாற்றுத்திறனாளிகள் அணுக தடையில்லா உட்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் வரையறுக்கிறது. அதனடிப்படையில் புதிதாக கட்டப்படும் இரண்டு அடுக்குக்கு மேல் கொண்ட அனைத்து கட்டடங்களிலும் மின் தூக்கிகள்,  சாய்தள மேடை, சிறப்பு கழிப்பறை, பார்வையற்றோருக்கான அறிவிப்பு பலகை, தனி வாகன நிறுத்தம் ஆகிய வசதிகளுடன் கட்டப்பட வேண்டியது கட்டாயம் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆணையிடப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகள் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்