தாய்கோ வங்கியில், ரூ.7 கோடி மோசடி - அமைச்சர் அன்பரசன்
தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியில், 7 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியுள்ளார்.
மானிய கோரிக்கையில் பேசிய திருத்தணி தொகுதி திமுக எம்.எல்.ஏ சந்திரன், தாய்கோ வங்கிகளில் நகைக் கடன் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறினார். இதற்கு பதிலளித்த, ஊரக தொழில் கூட்டுறவு அமைச்சர் தா. மோ. அன்பரசன், 7 கோடி ரூபாய் மதிப்பில், நகை கடன் மோசடி நடந்துள்ளது என்றார். தாய்கோ வங்கி மூலம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சார்பாக நாமக்கல், சேலம் பகுதியின் 5 வங்கிகளில், 7 கோடி ரூபாய் மதிப்பில், நகை கடன் மோசடி நடந்துள்ளதாக கூறினார். போலியான முறையில் நகைக்கடன் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், 45 தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கிகளான தாய்கோவில், ஆய்வு நடைப்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.