அங்கன்வாடி திறப்பு - நெறிமுறைகள் வெளியீடு

செப்டம்பர் ஒன்று முதல் அங்கன்வாடி மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Update: 2021-08-25 07:32 GMT
இதன்படி, அங்கன்வாடி பணியாளர்கள் கட்டாயம் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும்,

கொரோனா அறிகுறிகள் இருந்தால் அங்கன்வாடிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடியில், சமையலுக்கு பயன்படுத்தும் அரிசி, பருப்பு, காய்கறிகளை நன்கு சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, வாரத்தில் 6 நாட்கள் மதிய உணவு வழங்க வேண்டும் என்றும்,

குழந்தைகளை அங்கன்வாடி மையங்களிலேயே, உணவு உட்கொள்ள செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கன்வாடி குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு பதிலாக உலர் உணவு பொருட்கள் அல்லது உணவு பாதுகாப்பு தொகை வழங்கப்படாது என அரசு தெரிவித்துள்ளது.

மேலும், அங்கன்வாடிக்கு வரும் 2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு முக‌க்கவசம் கட்டாயம் இல்லை என்றும்,

ஆனால், குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர் கட்டாயம் முக‌க்கவசம் அணிய வேண்டும் என சமூக நலத்துறை கூறியுள்ளது.

இதேபோல் குழந்தைகளுக்கு உணவு வழங்கும்போது தகுந்த சமூக இடைவெளியை அங்கன்வாடி பணியாளர்கள் உறுதி செய்வதோடு,

குடிநீரை காய்ச்சி வடிக்கட்டிய பின்னரே வழங்க வேண்டும் என அரசு வெளியிட்ட பாதுகாப்பு வழிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்