பஞ்சர் ஒட்டவந்த சிறுமிக்கு பாலியல் சீண்டல் - 70 வயது முதியவர் போக்சோவில் கைது
ஜெயங்கொண்டம் அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக முதியவருக்கு, கிராம மக்கள் தர்மஅடி கொடுத்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அறங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் சுந்தரம், ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் தண்ணீர் தொட்டி ஆப்ரேட்டராகவும், மற்ற நேரத்தில் பஞ்சர் ஒட்டும் வேலையும் செய்து வருகிறார். 9 வயது சிறுமி ஒருவர், அவரிடம் சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டித் தரக் கோரியுள்ளார். அப்போது, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்து, தப்பி ஓடிய சிறுமி, பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சுந்தரத்தை சுற்றி வளைத்த கிராம மக்கள், தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், விசாரித்து வருகின்றனர்.