16 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் - போக்சோவில் இளைஞர் கைது
கோவை மாவட்டம் சூலூர் அருகே சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
செலக்கரிச்சல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவர், ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த சுல்தான்பேட்டை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சக்தியை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது.