ஸ்பிரிங்லர் முறையில் நீர்பாசனம் - சம்பங்கி விவசாயிகள் மகிழ்ச்சி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் சம்பங்கி பயிருக்கு ஸ்பிரிங்லர் முறையில் நீர்ப் பாசனம் செய்யப்படுகிறது.
சிக்கரசம்பாளையம், பெரியகுளம், புளியங்கோம்பை, அரியப்பம்பாளையம், அய்யன்சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில், சம்பங்கி பயிரிட்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் சம்பங்கி அனுப்பி வைக்கப்படுகிறது. ஸ்பிரிங்லர் முறையில், நீர்ப்பாசனம் செய்வதால், அதிக பயன் கிடைப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.