அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி..அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது புகார்
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி..அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது புகார்
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி..அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது புகார்
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, 8 லட்சம் மோசடி செய்ததாக, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சீத்தபட்டியைச் சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் சின்னச்சாமி. இவரிடம் கூட்டுறவு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, பெரம்பலூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ செழியன் 8 லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகின்றது. பணம் வாங்கி,
சில வருடங்கள் ஆகியும், வேலையும் வாங்கித் தராததால், கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு சின்னச்சாமி கேட்டுள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ செழியன் பணத்தை தராததால், அவர்மீது, வையம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். காவல்துறை உயரதிகாரிகளுக்கும் இந்த புகாரை அனுப்பி இருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், செழியன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.