ஜூன் 28 ம் தேதி முதல் "கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை" - உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர்

தமிழகத்தில் ஜூன் 28 ம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.

Update: 2021-06-23 06:34 GMT
தமிழகத்தில் ஜூன்  28 ம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இருதரப்பிலும் தயாராக உள்ள வழக்குகளை மட்டுமே நேரடி விசாரணைக்கு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். ஜூலை 4ஆம் தேதி வரை சாட்சிகள் விசாரணை செய்ய கூடாது என சுற்றறிக்கையில் கூறியுள்ள பதிவாளர் தனபால், தேவையற்ற கூட்டத்தை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்ட நீதிபதிகள், தொற்று பரவலை கருத்தில் கொண்டு நீதிமன்றங்களை திறப்பது குறித்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என பதிவாளர் வலியுறுத்தியுள்ளார். நீதிமன்ற ஊழியர்கள் 75 சதவீதம் பேர், சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தை பொறுத்தவரை ஆன்லைன் வழக்கு விசாரணை முறையை தொடரும் என்றும், ஜூன் 28 முதல் மத்திய - மாநில அரசு வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகலாம் என்று தலைமை பதிவாளர் தனபால் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்