3வது அலையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆக்சிஜன், மருந்து, தடுப்பூசி வினியோகம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறினார். இதனை பதிவு செய்த கொண்ட நீதிபதிகள், 3-வது அலையை எதிர்கொள்ள, ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட வசதிகள் அகற்றாமல் தொடர வேண்டும் என உத்தரவிட்டனர். ஆக்சிஜன் உற்பத்தியை தொடர்வதோடு, தடுப்பூசி மருந்து வினியோகத்தை துரிதப்படுத்த வேண்டும் என ஆணையிட்டனர். தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியது. இதையடுத்து வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.