"கடந்த அரசை விட அதிக பரிசோதனை" - அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக சரிந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு இன்னும் வேகமாக செயல்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாகவும், அவர் சொல்வதைப் போல சுகாதாரத் துறை இன்னும் வேகமாக செயல்படும் எனவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.