ஆக்சிஜன் சிலிண்டரில் ஏற்பட்ட விபத்து - பார்வையை இழந்த தற்காலிக செவிலியர்
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையில், ஆக்சிஜன் சிலிண்டர் வால்வு வெடித்து கண் பார்வை இழந்த தற்காலிக செவிலியருக்கு பணி நிரந்தரம் வழங்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.
லாலாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக செவிலியராக பணிபுரிந்து வந்த இந்து என்பவருக்கு, கடந்த மாதம் 23ம் தேதி பணியின் போது ஆக்சிஜன் சிலிண்டரில் ஏற்பட்ட விபத்து காரணமாக, இடது கண்ணில் பார்வை பறிபோனது. இந்நிலையில், செவிலியரின் ஏழ்மை மற்றும் சேவையை கருதி, அவரை பணி நிரந்தரம் செய்ய ராணிபேட்டை ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பரிந்துரை செய்துள்ளார்.