அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி - விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Update: 2021-05-31 05:09 GMT
கடந்த 2018ம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக, சூரப்பா நியமிக்கப்பட்ட நிலையில், அவருடைய பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான தேடுதல் குழு தமிழக ஆளுநரால் அறிவிக்கப்பட்டது. 

அதில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார், தமிழக அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஜூன் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்ய மற்றும் சமர்ப்பிக்க இணையதள முகவரிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து, நடைபெறும் நேர்முகத் தேர்வில் தகுதியான 3 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களில் இருந்து ஒருவரை தமிழக ஆளுனர் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா  நியமிக்கப்பட்டது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்