பால் விலை குறைப்பால் ரூ.270 கோடி இழப்பு - பால் வளத்துறை அமைச்சர் நாசர் தகவல்

ஆவின் பால் விலை குறைக்கப்பட்டதால் 270 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த இழப்பை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருதாக ,பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-30 12:15 GMT
ஆவின் பால் விலை குறைக்கப்பட்டதால் 270 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த இழப்பை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருதாக ,பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். நெல்லையில் ஆவின் உற்பத்தி நிலையத்தை அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,ஆவின் பால் விற்பனை ,36 லட்சம் லிட்டராக இருந்த நிலையில், தற்போது 39 லட்சமாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார். ஆவின் நிறுவன வருவாயை அதிகரிக்க கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டதை போன்று, கிழக்கு மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஆவின்பால் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் நாசர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்