அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்கள் - அரசாணை

அனைத்து அரசு அலுவலகங்களிலும் சுழற்சி முறையில் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-05-05 11:11 GMT
அனைத்து அரசு அலுவலகங்களிலும் சுழற்சி முறையில் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் நாளை முதல் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என தமிழக அரசு கட்டுப்பாடு விதித்தது

இதனை நிறைவேற்றும் விதமாக நாளை முதல் வருகிற 20ஆம் தேதி வரை அரசு அலுவலகங்களில் சுழற்சி முறையில் பணியை ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது 

அதன்படி, அலுவல் பணிகளை பொறுத்து மாற்று நாட்கள் அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை ஊழியர்களுக்கு பணியை ஒதுக்க வேண்டும் என உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குரூப் ஏ அதிகாரிகள் மற்றும் அனைத்துத்துறை தலைமை அதிகாரிகள் தினமும் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து ஊழியர்களும் மின்னனு முறையில் அலுவலகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் எனவும், அனுமதியின்றி வெளியூர் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்