ரிசார்ட் கட்டடத்தை இடிக்க உத்தரவு

விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள சொகுசு விடுதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர் நலச்சங்க தலைவர் செல்வராஜ் குமார் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Update: 2021-04-10 07:18 GMT
ரிசார்ட் கட்டடத்தை இடிக்க உத்தரவு 

விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள சொகுசு விடுதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர் நலச்சங்க தலைவர் செல்வராஜ் குமார் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அதில் சுற்றுச்சூழல் அமைச்சக ஒப்புதல் இல்லாமல் கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அனுமதி பெறாமல் ஆயிரத்தி 100 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக தீர்ப்பாயம் உறுப்பினர் தெரிவித்தனர்.விதிமீறல் கட்டுமானத்தை அந்த நிறுவனமே அகற்ற வேண்டும் எனவும், இல்லாவிட்டால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அகற்ற வேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியதற்காக 10 கோடி ரூபாயை இழப்பீடு செலுத்தவும் உத்தரவிட்டது.கடற்கரையிலிருந்து 200 முதல் 500 மீட்டர் தொலைவில் உள்ள கட்டிடங்களை வரைமுறைப்படுத்த மத்திய அரசை அணுகலாம் என தீர்ப்பளித்த தீர்ப்பாயம்,அதுவரை கட்டுமானங்களை பயன்படுத்தக் கூடாது என தெளிவுபடுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்