இன்றும், நாளையும் கன முதல் அதிகன மழை பெய்யும்" - தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்
தமிழகத்திற்கு இன்றும் நாளையும் வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்திற்கு இன்றும் நாளையும் வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.புரேவி புயல் காரணமாக. கன்னியாகுமரி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் அதிகன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதேபோல, தென் தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. புயல்கரையை கடக்கும் நாள் அன்றும், ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.