"தமிழகத்தில் இலங்கை தாதாக்கள் பதுங்கி உள்ளனர்" - தமிழக போலீசாருக்கு ரெட் அலர்ட் விடுத்த இன்டர்போல்

தமிழகத்தில் இலங்கை நாட்டை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள் 10 பேர் பதுங்கியிருப்பதாக இன்டர் போல் போலீசார் எச்சரிக்கை விடுத்ததோடு ரெட் அலர்ட் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2020-10-17 08:27 GMT
கடந்த சில நாட்களுக்கு முன்பாக இலங்கை நிழல் உலக தாதாவான அழாகாப் பெரும்மக சுனில் ஜெமினி பொன்சேகா தமிழகத்தில் கைது செய்யப்பட்டார். இவர் இலங்கையில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் இலங்கையை சேர்ந்த 10 தாதாக்கள் பதுங்கி இருப்பதாக சர்வதேச போலீசான இன்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே இலங்கை தாதா அங்கொடா லொக்கா தமிழகத்தில் உயிரிழந்த நிலையில் இப்போது இன்டர்போலின் இந்த ரெட் அலர்ட் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்