கொரோனா விதிமுறைகள் மீறல் : ரூ.2.52 கோடி அபராதம் வசூல் - சென்னை மாநகராட்சி தகவல்
சென்னையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து இதுவரை 2 கோடியே 52 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து இதுவரை 2 கோடியே 52 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அபராதம் வசூலிப்பது நோக்கம் இல்லை என்றும், மக்கள் தங்களின் தவறை உணர்ந்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.